தஞ்சையில் விவசாயிகள் கைது.. அண்ணாமலை கண்டனம்

தஞ்சாவூரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றதாக விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். இதற்கு, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “நிலுவைத் தொகையை வழங்கக் கோரி போராடி வரும் விவசாயிகள் மீதா உங்கள் அடக்குமுறையைக் காட்டுவது?. கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். கரும்பு கொள்முதலுக்கான நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
Tags :