விளம்பர போர்டு சரிந்துவிழுந்து 3 வாலிபர்கள் பலி.

by Editor / 01-06-2023 07:16:40pm
விளம்பர போர்டு சரிந்துவிழுந்து 3 வாலிபர்கள் பலி.

கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டியில் ராட்சத விளம்பர பலகை சரிந்து மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கருமத்தம்பட்டி பகுதியில் விளம்பர பேனர் வைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் பலத்த காற்று வீசத்தொடங்கியதால் பேனர் கட்டிக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் இறங்கி தப்பிக்க முயன்றுள்ளனர். ஆனால், அதற்குள் இரும்பு கம்பிகள் சரிந்து விழுந்ததால் மூன்று பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் யார் ..யார்..?என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

Tags :

Share via

More stories