ஜீன் மாத ராசி பலன்கள் - 2023.

by Admin / 01-06-2023 05:40:52pm
ஜீன் மாத ராசி பலன்கள் - 2023.

மேஷம் ராசி-ஜீன் மாத ராசி பலன்கள் - 2023.

சூரியன் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் பேச்சுக்களில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். பொழுதுபோக்கு துறைகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும். வருமானத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்களுக்கு ஞாபக சக்தி மேம்படும். செவ்வாய் சுக ஸ்தானத்தில் இருப்பதால் மற்றவர்களை பற்றி கருத்துக்கள் கூறும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். உடன்பிறந்தவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். புதன் ராசி ஸ்தானத்தில் இருப்பதால் வெளியிடங்களில் கோபத்தை விட விவேகத்தை கையாளவும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் அவ்வப்போது தோன்றி மறையும். வைகாசி 18ஆம் தேதி முதல் புதன் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் பணிகளில் உள்ள நுணுக்கமான விஷயங்களை எளிதில் புரிந்து கொள்வீர்கள். பெருந்தன்மையுடன் செயல்படுவதன் மூலம் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். சுக்ரன் சகோதர ஸ்தானத்தில் இருப்பதால் சிறு தூர பயணங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். குறுந்தொழில் தொடர்பான முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். வைகாசி 16ஆம் தேதி முதல் சுக்ரன் சுக ஸ்தானத்தில் இருப்பதால் எண்ணிய பணிகளால் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். குரு ராசி ஸ்தானத்தில் இருப்பதால் பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். பிள்ளைகளுக்கு சுபகாரியம் நடைபெறும். ஆன்மிக பயணங்களை மேற்கொள்வீர்கள். சனி லாப ஸ்தானத்தில் இருப்பதால் எதிலும் சிக்கனத்துடன் செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். விவசாய பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். ராகு ராசி ஸ்தானத்தில் இருப்பதால் பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்படும். கேது களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் செய்கின்ற செயல்பாடுகளில் தாமதம் ஏற்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். செல்வச்சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.

ரிஷபம் ராசி ஜீன்- மாத ராசிபலன்கள்= 2023

சூரியன் ராசி ஸ்தானத்தில் இருப்பதால் தனவரவு மேம்படும். வாழ்க்கைத் துணையுடன் விட்டுக்கொடுத்து செல்லவும். சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்டு முடிவு எடுக்கவும். உடலில் சூடு சார்ந்த பிரச்சனைகள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் மேம்படும். செவ்வாய் சகோதர ஸ்தானத்தில் இருப்பதால் பெருந்தன்மையான குணநலன்களின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். நண்பர்களை பற்றிய பழைய நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதன் போக ஸ்தானத்தில் இருப்பதால் பிடிவாத குணத்தினை குறைத்து கொள்ளவும். பூர்வீக சொத்துக்களின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். வைகாசி 18ஆம் தேதி முதல் புதன் ராசி ஸ்தானத்தில் இருப்பதால் புதுவிதமான துறைகளின் மீது ஆர்வம் உண்டாகும். உங்களை பற்றிய கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படும். சுக்ரன் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். வைகாசி 16ஆம் தேதி முதல் சுக்ரன் சகோதர ஸ்தானத்தில் இருப்பதால் காதணிகள் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். குரு போக ஸ்தானத்தில் இருப்பதால் கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உடலில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். சனி தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் பெரியோர்களின் சந்திப்பால் இழுபறியான சில செயல்களை செய்து முடிப்பீர்கள். நில மற்றும் வீடு விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும். ராகு போக ஸ்தானத்தில் இருப்பதால் வரவுக்கு மேல் செலவு ஏற்படும். எந்த காரணத்தை கொண்டும் மனைவி வருந்தும் படியான செயல்களை செய்யாதீர்கள். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். கேது சத்ரு ஸ்தானத்தில் இருப்பதால் தொழிலில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும 
.
மிதுனம் ராசி  ஜீன் மாத ராசிபலன்கள் -2023..

சூரியன் போக ஸ்தானத்தில் இருப்பதால் வியாபாரத்தில் புதிய முயற்சிகள் ஈடேறும். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் வேண்டும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும். செவ்வாய் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் மற்றவர்கள் கூறுவதை நம்பி முடிவு எடுக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்ப்பது நல்லது. புதன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். வைகாசி 18ஆம் தேதி முதல் புதன் போக ஸ்தானத்தில் இருப்பதால் வியாபாரத்தில் இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். சுக்ரன் ராசி ஸ்தானத்தில் இருப்பதால் இழுபறியாக இருந்துவந்த சொத்து விற்பனைகள் சாதகமாக முடியும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வாகனங்களில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். வைகாசி 16ஆம் தேதி முதல் சுக்ரன் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் இறை சார்ந்த பணிகளில் தெளிவு பிறக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குரு லாப ஸ்தானத்தில் இருப்பதால் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். இளைய சகோதரர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். சனி பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் அகலும். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகளில் விட்டுக்கொடுத்து செயல்படுவதன் மூலம் இழுபறிகள் குறையும். ராகு லாப ஸ்தானத்தில் இருப்பதால் எதிர்பாராத சில திருப்பங்களால் மாற்றங்கள் உண்டாகும். கலை சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். வெளிநாட்டு தொடர்புகளால் மேன்மை உண்டாகும். கேது புத்திர ஸ்தானத்தில் இருப்பதால் பிரலபலமானர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்

கடகம் ராசி ஜீன் மாத ராசிபலன்கள்- 2023..

சூரியன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் வருமானத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய வியாபாரம் சார்ந்த செயல்பாடுகளில் லாபம் மேம்படும். சுபகாரியங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். செவ்வாய் ராசி ஸ்தானத்தில் இருப்பதால் சுபகாரியம் தொடர்பான செயல்களை அலைச்சலுக்கு பின்பு செய்து முடிப்பீர்கள். புதன் தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். செய்யும் முயற்சிகளில் புதிய அனுபவம் உண்டாகும். வைகாசி 18ஆம் தேதி முதல் புதன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். அரசு சார்ந்த ஆவணங்களை கையாளுவதில் கவனம் வேண்டும். சுக்ரன் போக ஸ்தானத்தில் இருப்பதால் அடகு வைத்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் அமையும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். வைகாசி 16ஆம் தேதி முதல் சுக்ரன் ராசி ஸ்தானத்தில் இருப்பதால் மாணவர்களுக்கு உயர்நிலை கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். புதிய மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குரு தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் பணிகளில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்விற்கான சூழல் அமையும். சுபகாரியம் நிமிர்த்தமான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். குடும்ப வாழ்க்கையில் உற்சாகம் அதிகரிக்கும். சனி அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் முன்கோபத்தை குறைத்து கொள்ளவும். ராகு தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் வியாபார பணிகளில் பிரிந்து சென்ற பங்குதாரர்களை மீண்டும் இணைத்து கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. கேது சுக ஸ்தானத்தில் இருப்பதால் மனதில் வியாபார ஸ்தலத்தை மாற்றம் செய்வது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் நேரிடலாம்

.சிம்மம் ராசி ஜீன் மாத ராசிபலன்கள்- 2023.

சூரியன் தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் வியாபாரத்தில் முக்கிய முடிவினை எடுப்பீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். எந்தவொரு செயலிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக செயல்பட வேண்டும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். செவ்வாய் போக ஸ்தானத்தில் இருப்பதால் கிடைப்பதை கொண்டு திருப்தி அடைவதால் மனதில் அமைதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். புதன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வைகாசி 18ஆம் தேதி முதல் புதன் தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் அடிப்படை கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். முகத்தில் புதுவித பொலிவுடன் காணப்படுவீர்கள். சுக்ரன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். உயர்கல்வியில் இருந்த குழப்பம் குறையும். வைகாசி 16ஆம் தேதி முதல் சுக்ரன் போக ஸ்தானத்தில் இருப்பதால் எதிர்பாராத சில முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பேராசையின்றி செயல்படுவதன் மூலம் நன்மை ஏற்படும். குரு பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் மறையும். சனி களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் ஏற்படும். நண்பர்களின் வழியில் மாற்றமான சூழல் அமையும். எளிமையான பணிகள் கூட கடுமையாக தெரியும். ராகு பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் வருமான வாய்ப்புகளை மேம்படுத்தி கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான வாய்ப்புகள் ஏற்படும். கேது சகோதர ஸ்தானத்தில் இருப்பதால் கொடுத்த பணவரவுகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும்
.
 கன்னி ராசி   ஜீன் மாத ராசிபலன்கள்- 2023.

சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தடைபட்டு வந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப அனைவரையும் அனுசரித்து செல்லவும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருப்பதால் மற்றவர்கள் செய்யும் செயல்பாடுகளில் கருத்துக்கள் கூறுவதை தவிர்க்கவும். நெருப்பு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். புதன் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் அவ்வப்போது தோன்றி மறையும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். வைகாசி 18ஆம் தேதி முதல் புதன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் சொந்த ஊர் செல்வது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மருத்துவ பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சுக்ரன் தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் சவாலான வாதங்களையும் சாதுரியமாக வெற்றி கொள்வீர்கள். விரும்பிய உணவினை உண்டு மகிழ்வீர்கள். வைகாசி 16ஆம் தேதி முதல் சுக்ரன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். நண்பர்களால் வருமான வாய்ப்புகள் உண்டாகும். குரு அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் சிந்தனைகளில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். சனி சத்ரு ஸ்தானத்தில் இருப்பதால் உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். ராகு அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் முன்கோபத்தினை தவிர்த்து பொறுமையாக செயல்படுவதன் மூலம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கேது குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் மனதில் புதுவிதமான சிந்தனைகள் அதிகரிக்கும். இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும்.

துலாம் ராசி   ஜீன் மாத ராசிபலன்கள்- 2023..

சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் அமையும். மூத்த உடன்பிறப்புகளிடம் அனுசரித்து செல்லவும். இணையம் சார்ந்த பணிகளில் புதுமையான சூழல் அமையும். வாகன பயணத்தில் பொறுமை வேண்டும். செவ்வாய் தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் பொருளாதாரம் தொடர்பான விஷயங்களால் குழப்பம் உண்டாகும். சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது மேன்மையை ஏற்படுத்தும். புதன் களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் உத்தியோக பணிகளில் பதவி உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வைகாசி 18ஆம் தேதி முதல் புதன் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் கல்வி நிமிர்த்தமான விரயங்கள் ஏற்படும். வியாபார பணிகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். சுக்ரன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் நண்பர்களை பற்றிய புரிதல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். வைகாசி 16ஆம் தேதி முதல் சுக்ரன் தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் வெளிவட்டாரத்தில் பொறுமையை கடைபிடிக்கவும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். குரு களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிரச்சனைகள் தீரும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உடலில் இருந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். சனி புத்திர ஸ்தானத்தில் இருப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு திருப்தியை ஏற்படுத்தும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். ராகு களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் திட்டமிட்ட பணிகள் நிறைவேறுவதில் உழைப்புகள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். கேது ராசி ஸ்தானத்தில் இருப்பதால் இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பமும், செய்கின்ற செயல்பாடுகளில் விரக்தியும் ஏற்பட்டு நீங்கும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்து கொள்ளவும்
.
விருச்சிகம் ராசி  ஜீன் மாத ராசி பலன்கள்- 2023.

சூரியன் களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்லவும். தொழில் சார்ந்த முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். நண்பர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். ஆடம்பர பொருட்களின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். புதன் சத்ரு ஸ்தானத்தில் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவதன் மூலம் மேன்மை ஏற்படும். வெளியூர் பயண வாய்ப்புகளில் மாற்றமான சூழல் அமையும். வைகாசி 18ஆம் தேதி முதல் புதன் களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு திறமைகள் வெளிப்படும். சுக்ரன் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் புதிய இடங்களுக்கு சென்று வருவீர்கள். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். வைகாசி 16ஆம் தேதி முதல் சுக்ரன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். தவறிப்போன பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குரு சத்ரு ஸ்தானத்தில் இருப்பதால் அரசு விதிகளுக்கு உட்பட்டு நடப்பது தேவையற்ற விரயத்தை தவிர்க்கும். வாக்குறுதிகளை அளிக்கும்போது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். சனி சுக ஸ்தானத்தில் இருப்பதால் நண்பர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். ராகு சத்ரு ஸ்தானத்தில் இருப்பதால் மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். செயல்பாடுகள் மற்றும் அணுகுமுறையில் சில மாற்றங்கள் உண்டாகும். கேது போக ஸ்தானத்தில் இருப்பதால் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வேலை நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும்.
 தனுசு ராசி மாத ஜீன் ராசி பலன்கள்- 2023.

சூரியன் சத்ரு ஸ்தானத்தில் இருப்பதால் புதிய வேலை சார்ந்த முயற்சிகள் ஈடேறும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் அமையும். தந்தைவழி உறவினர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் கொடுக்கல், வாங்கலில் விழிப்புணர்வுடன் செயல்படவும். வெளிப்படையாக பேசுவது நன்மையை ஏற்படுத்தும். புதன் புத்திர ஸ்தானத்தில் இருப்பதால் சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். வைகாசி 18ஆம் தேதி முதல் புதன் சத்ரு ஸ்தானத்தில் இருப்பதால் வாழ்க்கைத் துணைவரை பற்றிய புரிதல் மேம்படும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். சுக்ரன் களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். மனதில் உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வைகாசி 16ஆம் தேதி முதல் சுக்ரன் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். குரு புத்திர ஸ்தானத்தில் இருப்பதால் மனதளவில் புதிய மாற்றம் ஏற்படும். எடுத்த முயற்சிகளில் புதிய அனுபவமும், சாதகமான வாய்ப்பும் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் அமையும். சனி சகோதர ஸ்தானத்தில் இருப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ராகு புத்திர ஸ்தானத்தில் இருப்பதால் மனதில் புதுவிதமான ஆசைகளும், இலக்குகளும் உண்டாகும். எண்ணிய காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். கேது லாப ஸ்தானத்தில் இருப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் குறையும். வித்தியாசமான பொன், பொருள் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். சேமிப்பது தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும்.

மகரம் ராசி  மாத  ஜீன் ராசிபலன்கள்..- 2023.

சூரியன் புத்திர ஸ்தானத்தில் இருப்பதால் உத்தியோகத்தில் உள்ள சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். மறைமுகமாக இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். செயல்பாடுகளில் சிறு சிறு மாற்றங்களை செய்வதன் மூலம் நன்மை உண்டாகும். புதிய தொழில்நுட்பம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். செவ்வாய் களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் உலகியல் நடவடிக்கைகளின் மூலம் சில மாற்றங்கள் உண்டாகும். எதிர்பாராத செலவுகளின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். புதன் சுக ஸ்தானத்தில் இருப்பதால் நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வைகாசி 18ஆம் தேதி முதல் புதன் புத்திர ஸ்தானத்தில் இருப்பதால் வியாபார பணிகளில் புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். சுக்ரன் சத்ரு ஸ்தானத்தில் இருப்பதால் பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வைகாசி 16ஆம் தேதி முதல் சுக்ரன் களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். கடினமான வேலைகளை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். குரு சுக ஸ்தானத்தில் இருப்பதால் உலகியல் வாழ்க்கையை பற்றிய புரிதல் ஏற்படும். மனதிற்கு விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சனி குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். ராகு சுக ஸ்தானத்தில் இருப்பதால் வாழ்க்கைத் துணைவரின் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். குழந்தைகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். கேது தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். மருத்துவம் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் கிடைக்கும்
.
கும்பம் ராசி  ஜீன் மாத ராசிபலன்கள் 2023...

சூரியன் சுக ஸ்தானத்தில் இருப்பதால் தாய்வழி உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். வாழ்க்கைத் துணைவர் மீதான ஆதிக்கத்தை குறைத்து கொள்வது நல்லது. செய்கின்ற செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும். செவ்வாய் சத்ரு ஸ்தானத்தில் இருப்பதால் தொழில் சார்ந்த முதலீடுகளை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேம்படும். சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். புத்தகம் தொடர்பான பணிகளில் ஆர்வமின்மையான சூழல் அமையும். புதன் சகோதர ஸ்தானத்தில் இருப்பதால் கடன்களை அடைப்பதற்கான உதவிகள் கிடைக்கும். சிற்றின்பம் சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். வைகாசி 18ஆம் தேதி முதல் புதன் சுக ஸ்தானத்தில் இருப்பதால் கற்பனையான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். சுக்ரன் புத்திர ஸ்தானத்தில் இருப்பதால் பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். வைகாசி 16ஆம் தேதி முதல் சுக்ரன் சத்ரு ஸ்தானத்தில் இருப்பதால் பழக்கவழக்கத்தில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் மாற்றமான சூழ்நிலைகள் அமையும். குரு சகோதர ஸ்தானத்தில் இருப்பதால் விவாதங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். சனி ராசி ஸ்தானத்தில் இருப்பதால் வருமானம் சீராக இருக்கும். ராகு சகோதர ஸ்தானத்தில் இருப்பதால் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களை பற்றிய புரிதல் மேம்படும். கேது பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் குறையும்.

மீனம் ராசி ஜீன் மாத ராசிபலன்கள்- 2023.
சூரியன் சகோதர ஸ்தானத்தில் இருப்பதால் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு படிப்படியாக குறையும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஆர்வம் மேம்படும். செவ்வாய் புத்திர ஸ்தானத்தில் இருப்பதால் ஆராய்ச்சி தொடர்பான கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தானியம் சார்ந்த வியாபாரத்தில் கொள்முதல் செய்யும் பொழுது சிந்தித்து செயல்படவும். புதன் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வைகாசி 18ஆம் தேதி முதல் புதன் சகோதர ஸ்தானத்தில் இருப்பதால் தொலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கமிஷன் தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். சுக்ரன் சுக ஸ்தானத்தில் இருப்பதால் நெருக்கமானவர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உண்டாகும். பத்திரம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். வைகாசி 16ஆம் தேதி முதல் சுக்ரன் புத்திர ஸ்தானத்தில் இருப்பதால் எண்ணிய சில பணிகள் முடிவதில் அலைச்சல்கள் உண்டாகும். அறிவுப்பூர்வமாக செயல்பட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். குரு குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் பொருளாதாரத்தில் மேன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும். சனி போக ஸ்தானத்தில் இருப்பதால் தனம் சார்ந்த நெருக்கடிகள் ஏற்படும். ஆடம்பரமான செலவுகளை குறைத்து கொள்ளவும். ராகு குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் பேச்சுக்களில் நிதானம் வேண்டும். புதிய மொழிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கேது அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் ஆன்மிகம் தொடர்பான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள்.


 

 

Tags :

Share via