தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் .உடன் முதல்வர் எழுந்து ...
தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.உடன் முதல்வர் எழுந்து பேரவையில் முறையாக அனுமதி பெற்ற பேசவேண்டும்.அவர் பத்திரிக்கை செய்தியை வைத்து பேசாமல் ஆதாரத்துடன் பேசட்டும் நானும் பேசுகிறேன்.அ.தி.மு.க ஆட்சியில் என்னமாதிரியானஆட்சி நடந்து வந்தது என்பதற்கான ஆதாரம் என்கையில் உள்ளது.அவர் பேசட்டும் .பிறகு நான் பேசுகிறேன்என்றார்.
அ.தி.மு.க ஆட்சியின் போது நடந்த சாத்தான்குளம் சம்பவம்,தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் என பட்டியிலிட்ட முதலமைச்சர் தி.மு.க.பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் தவறாக நடந்த செயலில் இருவர் மீது எப்.ஐ.ஆர். போடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.பெண்களுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அரசு உடன் செயில் இறங்கும்என்றார் .இந்நிலையில் சட்டப்பேரவைத் தலைவர் அனுமதியளிக்க வில்லை என்று அ.தி.மு.க.வின ர் வெளிநடப்புச் செய்தனர் வெளியேறி அ.தி.மு.கவினர் எதிர்க்கட்சித்தலைவருடன் செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டனர்.எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகர்பேச அனுமதி தரமறுத்து விட்டார்.தமிழ்நாட்டில் காவல் துறையினருக்கே பாதுகாப்பில்லை.வடபழனியில் தி.மு.க கூட்டத்தில் தி.மு.க வினரால் பெண்காவலர் பாலியல் சீண்டல் நடந்தது.இரண்டு நாள் கழித்தே கைது செய்தனர் .எங்கே பார்த்தாலும் கஞ்சா விற்பனை நடக்கிறது மக்கள் பிரச்சனையை பேச அனுமதிக்கவில்லை என்றும் பேசினார்.இடைமறித்த செய்தியாளர் ,சட்டமன்றத்தில் பிரச்சனை செய்வதற்கு மட்டுமே வருவதாக சொல்லப்படுகிறது.மக்கள் பிரச்சனை பேச வேண்டிய நேரத்தில் இது போன்ற செயல் சரியா என கேட்க. இதுவும் மக்களின் முக்கிய பிரச்சனை அல்வா என்றார்.
Tags :