ஜி. பி. எஸ். எக்கோ சவுண்டு மற்றும் ஒயர்லெஸ் ஆகிய கருவிகள் திருட்டு 

by Editor / 11-01-2023 12:27:27pm
ஜி. பி. எஸ். எக்கோ சவுண்டு மற்றும் ஒயர்லெஸ் ஆகிய கருவிகள் திருட்டு 

கன்னியாகுமரி குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடித்தொழிளுக்கு சென்றுவருகின்றன.இந்தநிலையில் வானிலை மாற்றம் காரணமாக கடந்த 2 நாட்களாக குளச்சல் கடல் பகுதியில் சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் அனைத்தும் கரை திரும்பி உள்ளன. கரை திரும்பிய படகுகள் மீன் பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன. 

குளச்சல் மீனவர்கள் வர்க்கீஸ்(67), விஜயன்(48), எட்வர்ட் (43) ஆகியோரும் தங்கள் படகுகளை துறமுகத்தில் நிறுத்தியிருந்தனர். இன்று காலை மீனவர்கள் படகு நிறுத்தப்பட்டிருந்தப்பகுதிக்கு சென்று இந்த பார்த்த போது மீனவர்கள் படகிலிருந்த ஜி. பி. எஸ். , எக்கோ சவுண்டு மற்றும் ஒயர்லெஸ் ஆகிய கருவிகள் திருட்டு போயிருந்தது. நள்ளிரவில் படகில் இருந்த தொழிலாளர்கள் அசந்து தூங்கும்போது யாரோ? மர்ம நபர்கள் படகுக்குள் புகுந்து மேற்படி கருவிகளை திருடி சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு ₹. 10 லட்சம் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து மீனவர்கள் குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்தனர். சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார். மேலும் துறைமுகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள சி. சி. டி. வி. கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். விசைப்படகுகளில் எக்கோ, ஜி. பி. எஸ். கருவிகள் திருட்டு போனது அப்பகுதி மீனவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via