பீகார் தேர்தல்: என்டிஏ கூட்டணி 162 முன்னிலை
பீகாரில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில், இதுவரை இல்லாத வகையில் 66.9 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. இதனால், பிகாரில் உள்ள 38 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 46 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (நவ., 14) விறுவிறுப்புடன் நடந்து வருகின்றன. காலை 9.45 மணி நிலவரப்படி, என்டிஏ கூட்டணி 162, எதிர்க்கட்சிகளின் மகாகத்பந்தன் கூட்டணி 75, ஜன் சுராஜ் கட்சி 3, மற்றவை 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. பெரும்பாமைக்கு தேவையான இடங்களை விட என்டிஏ கூட்டணி தற்போது முன்னிலை வகித்து வருகிறது.
Tags : பீகார் தேர்தல்: என்டிஏ கூட்டணி 162 முன்னிலை



















