திமுக நாடாளுமன்றத்தை முடக்க வேண்டும் - தவாக வேல்முருகன்

by Staff / 28-06-2024 12:29:48pm
திமுக நாடாளுமன்றத்தை முடக்க வேண்டும் - தவாக வேல்முருகன்

நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே நீட் விலக்கு சட்டத்தை கொண்டு வருமாறு இந்தியா கூட்டணி கட்சிகளுடன் இணைந்து திமுக நாடாளுமன்றத்தை முடக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், பண்ருட்டி எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று பேசிய அவர், தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தனித் தீர்மானத்தை வரவேற்கிறேன். நீட் தேர்வு எளிய மாணவர்களை மருத்துவ கல்விக்கு நுழைய விடாமல் தடுக்கிறது. மத்திய அரசு நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் முறைகேடுகள் நடக்கிறது என்றார்.

 

Tags :

Share via

More stories

Logo