இந்திய ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு மிகக் கடுமையான கட்டுப்பாடுகள்

by Admin / 26-12-2025 01:04:23am
இந்திய ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு மிகக் கடுமையான கட்டுப்பாடுகள்

இந்திய ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு 2025- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் புதிய மற்றும் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன .நாட்டின் பாதுகாப்பு மற்றும் ரகசியங்களை காக்கும் பொருட்டு ராணுவ தலைமையகம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது வீரர்கள் இன்ஸ்டாகிராம் யூடியூப் எக்ஸ் மற்றும் குவாரா போன்ற தளங்களை தகவல்கள் அறிந்து கொள்ள மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் எந்த ஒரு தளத்திலும் பதிவுகள் போடுவது கருத்துக்கள் தெரிவிப்பது அல்லது மற்றவர்களின் பதிவுகளை லைக் செய்வது போன்றவை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளன . வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், சிக்னல் மற்றும் ஸ்கை இப் ஆகியவற்றை அறிமுகமான நபர்களிடம் மட்டுமே சாதாரண தகவல்களை பகிர பயன்படுத்தலாம் என்றும் ரகசியமான அல்லது ராணுவ தொடர்பான எந்த தகவலையும் பகிரக்கூடாது என்றும் லிங் டின்வேலை தேடுதல் அல்லது சுய விபர குறிப்புகளை பதிவேற்றுவதற்கு மட்டுமே இந்த தளத்தை பயன்படுத்த அனுமதி உண்டு என்றும் சமூக ஊடகங்கள் மூலம் வீரர்கள் ஹனி டிராப் போன்ற வலையில் விழுவதை தவிர்க்கவும் தவறான தகவல்கள் பரவுவதை கண்காணிக்கவும் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன .இதற்கு முன்னர் 2020 ஆம் ஆண்டில் பேஸ்புக் ,டிக் டாக் உள்ளிட்ட 89 செய்திகளுக்கு இந்திய ராணுவம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு மிகக் கடுமையான கட்டுப்பாடுகள்
 

Tags :

Share via

More stories