ஐபில் கேப்டன் பதவியில் இருந்து திடீர் நீக்கம்

by Editor / 01-05-2021 04:58:11pm
ஐபில் கேப்டன் பதவியில் இருந்து திடீர் நீக்கம்

சென்னை அணிக்கு எதிராக கடந்த 29 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ஐதராபாத் அணி தோல்வியடைந்தது.இந்த தோல்விக்கு காரணம் தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர் அதிக பந்துகளை விரயம் செய்துவிட்டு அதிரடி காட்டாததுதான் என விமர்சனங்கள் எழுந்தது.அவர் 55 பந்துகள் பிடித்த வெறும் 57 ரன்கள் மட்டுமே எடுத்தது விமர்சனத்துக்குள்ளானது .

இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்,டேவிட் வார்னரின் ஆட்ட முறையே சரியில்லை. அவர் எந்தவித பதற்றமும் இன்றி ஆடியிருக்க வேண்டும்.கேப்டனாக டேவிட் வார்னருக்கு நான் அதிக ரேட்டிங் கொடுக்க மாட்டேன். சென்னை அணியின் ஓப்பனிங் பேட்டிங்கை உடைக்க சில விஷயங்களை வார்னர் செய்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. இதுவே வில்லியம்சன் கேப்டனாக இருந்திருந்தால் வேறு ஆட்டத்தை பார்த்திருக்கலாம் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து வார்னர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக நியூஸிலாந்து அணியில் அதிரடி கேப்டனான கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். வில்லியம்சன், நாளை ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டி முதல் கேப்டனாக பதவியேற்கவுள்ளார்.இதனை ஐதராபாத் அணி, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது

 

Tags :

Share via