பிளஸ் 2 பொதுத்தேர்வை கண்காணிக்க 3200 பறக்கும் படைகள்

by Staff / 28-02-2024 04:38:18pm
பிளஸ் 2 பொதுத்தேர்வை கண்காணிக்க 3200 பறக்கும் படைகள்

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுத 7.15 லட்சம் மாணவர்கள் தயாராக உள்ள நிலையில், தேர்வு நேரத்தின்போது முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் 3200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. 12ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில், எழுத்துத் தேர்வு வரும் மார்ச் 1 ஆம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் 3302 மையங்களில் தேர்வை நடத்த அரசு தேர்வுத்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

 

Tags :

Share via