இன்னும் சற்று நேரத்தில் வெளியாகிறது சி.பி.எஸ்.இ. பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள்...

by Admin / 30-07-2021 02:12:44pm
இன்னும் சற்று நேரத்தில் வெளியாகிறது சி.பி.எஸ்.இ. பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள்...
சி.பி.எஸ்.இ. பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படுகிறது.நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக சி.பி.

 எஸ்.இ. பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இதையடுத்து, மாணவர்கள் 12ஆம் வகுப்பில், பருவத்தேர்வு அல்லது அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 40 சதவீதமும், 11ஆம் வகுப்பில் பாடங்களுக்கு நடத்தப்பட்ட இறுதித் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்களில் 30 சதவீதமும், 10ஆம் வகுப்பில் மொத்தமுள்ள 5 பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மூன்று பாடங்களின் மதிப்பெண்களில் 30 சதவீதமும் கணக்கில் கொள்ளப்பட்டு, 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளன.

மேலும் 12ஆம் வகுப்பில் செய்முறைத் தேர்வு, அகமதிப்பீடு மதிப்பெண்கள் தொடர்பாக அந்தந்த பள்ளிகள் மாணவர்களுக்கு அளித்த மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று பிற்பகல் 2 மணிக்கு பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று சி.பி.
 
எஸ்.இ. அறிவித்துள்ளது. www.cbseresuts.nic.in என்ற இணையதள முகவரியில் தேர்வு முடிவகள் வெளியிடப்பட உள்ளன. மேலும், மதிப்பெண்களில் திருப்தியடையாத மாணவர்களுக்குத் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via