தவறு நடைபெற்றுள்ளது, அதை நியாயப்படுத்த விரும்பவில்லை-அமைச்சர் எ.வ.வேலு

by Editor / 20-06-2024 01:11:57am
தவறு நடைபெற்றுள்ளது, அதை நியாயப்படுத்த விரும்பவில்லை-அமைச்சர் எ.வ.வேலு

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவோர்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் எ.வ.வேலு ஆகியோர் நேரில் சந்தித்தனர். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, “கள்ளக்குறிச்சியில் விரும்பத்தகாத சம்பவம் நடைபெற்றுள்ளது. சிகிச்சைப் பெற்று வருவோர் உயிர் பிழைத்து வருவர் என்ற நம்பிக்கை உள்ளது. தவறு நடைபெற்றுள்ளது, அதை நியாயப்படுத்த விரும்பவில்லை. காவல் துறை சற்று மெத்தனமாக செயல்பட்டதால் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்” என்றார்.

 

Tags : தவறு நடைபெற்றுள்ளது, அதை நியாயப்படுத்த விரும்பவில்லை.

Share via
Logo