பாஜக குழு இன்று தமிழகம் வருகை

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அமைத்த 4 பேர் கொண்ட குழு இன்று தமிழ்நாடு வருகிறது. சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே பாஜக கொடிக்கம்பம் நட்ட விவகாரத்தில், பாஜகவை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனை அடுத்து பாஜகவுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுவதாக பாஜக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இது குறித்து விசாரிப்பதற்காக சென்னை வரும் பாஜக தலைமையில் நால்வர் குழு இன்று அண்ணாமலை வீட்டில் ஆலோசனை நடத்துகிறது.
Tags :