தேசிய பேரிடர் மீட்பு பணி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்

by Staff / 04-10-2022 12:30:47pm
தேசிய பேரிடர் மீட்பு பணி அலுவலர்களுக்கான  ஆலோசனை கூட்டம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய பேரிடர் மீட்பு ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட மீட்பு படையினர், மீட்பு பணி அலுவலர்களுக்கு பயிற்சி வழங்க உள்ளதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்த இந்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங்தலைமையில் நடந்தது.தேசிய பேரிடர் மீட்பு படையின் மூலம் மழைக்காலங்களில் வெள்ள அபாயம் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று தொடங்கி வருகிற 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

 பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணிகள் குறித்த விழிப்புணர்வு,, காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில்  பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்பொருட்டு, திருச்செங்கோடு ,, சூரியம்பாளையம் ஏரி பகுதி தொழிற்சாலை ஜேடர்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் , பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு பேரிடர் பயிற்சி,  விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.எந்த வகை பேரிடர்களையும் எதிர்கொள்ளவும், சமாளிக்கவும் பயிற்சிஅளிக்கப்படுகிறது. இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் , முதன்மை கல்வி அலுவலர் , உதவிஆட்சியர்  , மாவட்ட  ஆட்சியர்நேர்முக உதவியாளர் (, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்)உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via

More stories

Logo