இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்து
புனேவில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்தை ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து அவர், "பசுமை ஹைட்ரஜன் ஒரு சிறந்த ஆற்றல்மிக்க எரிசக்தி. ஹைட்ரஜன், காற்றைப் பயன்படுத்தி பேருந்தை இயக்குவதற்கு மின்சாரத்தை உருவாக்குகிறது. பேருந்தில் இருந்து வெளியேறும் ஒரே கழிவு நீர் என்பதால், இது சுற்றுச்சூழலை பாதிக்காது" என கூறினார்.
Tags :