ஒய்.எஸ் சர்மிளா உடல்நிலை கவலைக்கிடம்
தெலுங்கானாவில் பாதயாத்திரை மேற்கொள்ள ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி தலைவரும், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ் சர்மிளா சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து நேற்று அவரது உடல்நிலை மோசமான நிலையில், சர்மிளாவை மீட்டு போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தண்ணீர் கூட குடிக்காமல் போராட்டம் நடத்தியதால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :