சமூக ஊடகங்களில் ‘என் சென்னை’ பாடல் அறிமுகம்

by Editor / 23-08-2021 05:09:37pm
சமூக ஊடகங்களில் ‘என் சென்னை’ பாடல் அறிமுகம்

சென்னையைப் போற்றிப்பாடும் பாடல்கள் எத்தனையோ வந்திருக்கின்றன. ஆனால் ‘‘என் சென்னை யங் சென்னை’’ எனும் பாடல், வெறுமனே சென்னையின் புகழ்பாடும் மற்றுமோர் கீதம் மட்டுமல்ல. மாறாக #ECYC சென்னையின் இசைப் பாரம்பரியத்தைப் போற்றுவதுடன் துடிப்புமிகு சென்னை இளைஞர்களையும் கொண்டாடும் இசைக் கொண்டாட்டம் ஆகும்.

‘என் சென்னை யங் சென்னை’ டீஸர், கடந்தவாரம் வெளியிடப்பட்டவுடனேயே சென்னை இளைஞர்கள் அதனைக் கொண்டாடித்தீர்த்துவிட்டனர். அவர்களின் ஏகோபித்த ஆதரவின் காரணமாக இணைய உலகில் இந்த டீஸர் வைரலாகப் பரவிவிட்டது.

சென்னையின் புகழ்பாடும் கீதமான இப்பாடலுக்கு ‘என்னா மயிலு’ புகழ் பிரிட்டோ மைக்கேல் இசையமைத்திருக்கிறார். அந்தோணி தாசன், மும்பையிலிருந்து டோனி செபாஸ்டியன் (Dopeadelicz), அல்கா அஜித் ஆகிய நட்சத்திரப் பாடகர்கள் பாடியுள்ள இப்பாடலை நிஷாந்த் ராஜூ எழுதியிருக்கிறார் என்று ஐடியா பேக்டரி சுந்தர், ஷங்கர், பிரகாஷ் ஆகியோர் தெரிவித்தனர்.இது பற்றி அறிய theideafactory.in என்ற வலைதளத்தைப் பார்க்கலாம்.

 

Tags :

Share via