பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு- மேலும் 2 பேருக்கு தொடர்பு
குமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே தொழில் அதிபர் கல்யாண சுந்தரம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக குளச்சல் பகுதியைச் சேர்ந்த முஸ்ஸா மில் என்ற ஷமில் கான் என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர். கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் மேலும் இரண்டு பேருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Tags :