நெதர்லாந்தில் போராட்டம் - 2,400 பேர் கைது

நெதர்லாந்தில் புதை படிவ எரிபொருட்களை பிரித்தெடுக்கும் நிறுவனங்களுக்கு அந்த நாட்டு அரசு மானியம் வழங்குகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை அடுத்து சம்பவ இடத்தில் போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசி போராட்டத்தை கலைத்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 2,400 பேரை காவல் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
Tags :