அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி-தற்பொழுது இரண்டாம் சுற்று போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். காலை ஏழு முப்பது மணிக்கு தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின்தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த போட்டி முதலமைச்சர் வர காலதாமதமானதால் பங்கேற்பாளர்கள் போட்டியை தொடங்குமாறுகோாியதை தொடர்ந்து போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். 1100 காளைகளும் 600 வீரர்களும் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளன.
தற்பொழுது இரண்டாம் சுற்று போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.இதுவரை 15 காளைகளின் 16 கலைகள் பிடிபட்டன .ஐந்து மாடு பிடி வீரர்கள் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். கொஞ்ச நேரத்தில் தமிழக முதலமைச்சர் மு.. க.. ஸ்டாலின் வருகை தர உள்ளார்..முதல் பரிசு பெறும் மாடுபிடி வீரருக்கு காரும் முதலிடம் வரும் காளை உரிமையாளருக்கு டிராக்டர் பரிசம் வழங்கப்பட உள்ளது.
Tags :



















