காசியில் தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பிரதமர்
உபியில் உள்ள வாரணாசியில் அமைந்துள்ள பனாரஸ் பல்கலைக்கழகத்தில் இன்று பிரதமர் மோடி காசி தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வுக்கு பிரதமர் தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து வருகை தந்திருந்தார். அப்போது “வணக்கம் காசி, வணக்கம் தமிழ்நாடு” என தனது உரையை தமிழில் தொடங்கிய பிரதமர், “வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு இந்த சங்கமமே சாட்சி. தமிழ்நாடும் காசியும் கலாசாரத்தில் சிறந்து விளங்குகிறது. தமிழ் நாட்டின் திருமணங்களில் காசியாத்திரை என்ற வழக்கம் உள்ளது” என தமிழ்நாட்டையும், காசியையும் பெருமைப்படுத்தினார்.
Tags :



















