ஒவ்வொரு தொகுதியிலும் கலைஞரின் திருவுருவ சிலை; தீர்மானம் நிறைவேற்றம்

சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் அவசர செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 23) நடைப்பெற்றது. அவை தலைவர் சுபாஷ் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்எல்ஏ கலந்துகொண்டு பேசினார். அப்போது ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவ சிலை திறக்கப்பட வேண்டும். திமுகவில் அதிகளவிலான இளைஞரணி உறுப்பினர்களாக சேர்க்கப்பட வேண்டும். 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு அனைத்து உறுப்பினர்களும் அயராது பாடுபட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
Tags :