கொதிக்கும் சாம்பாரில் விழுந்து குழந்தை பலி

by Staff / 14-10-2022 11:31:26am
கொதிக்கும் சாம்பாரில் விழுந்து குழந்தை பலி

தருமபுரி மாவட்டம், சாமனூர் ஜீவா நகரைச் சேர்ந்தவர் அருணகிரி, சுகுணா தம்பதி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு சுகுணா அடுப்பிலிருந்து கொதிக்கும் சாம்பாரை எடுத்து கீழே வைத்துள்ளார். அப்போது அங்கு வந்த தேன்மொழி என்ற அவரின் ஒரு வயது குழந்தை நிலை தடுமாறிக் கொதிக்கும் சாம்பார் பாத்திரத்திற்குள் விழுந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் சுகுணா உடனே குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி குழந்தை தேன்மொழி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

Tags :

Share via

More stories

Logo