கட்டுப்பாடுகளின்றி ஓடிய காரால் விபத்து தம்பதி உட்பட நான்கு பேர் பலி

by Admin / 05-07-2021 05:47:03pm
கட்டுப்பாடுகளின்றி  ஓடிய காரால் விபத்து தம்பதி உட்பட நான்கு பேர் பலி

கட்டுப்பாடுகளின்றி  ஓடிய காரால் விபத்து தம்பதி உட்பட நான்கு பேர் பலி


விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியைச் சேர்ந்தவர் தயாளன் 63; மனைவி சந்திரா, 55. இருவரும் நேற்று காலை, 6:30 மணிக்கு, தெற்கு பைபாஸ் சர்வீஸ் ரோட்டில் நடந்து சென்றபோது, எதிரே பைக்கில் வந்த ஜே.சி.பி., டிரைவர் மணிகண்டனை, 33, நிறுத்தி பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது, விக்கிரவாண்டி அடுத்த சின்னதச்சூரைச் சேர்ந்த செல்வம் 55, பைபாஸ் சாலையை கடக்க முயன்றார்.அவ்வழியாக, சென்னையில் இருந்து ஆத்துார் நோக்கி சென்ற, 'போர்டு ஐகான் ஸ்போர்ட்ஸ் கார்' செல்வத்தின் மீது மோதியது.பின், கட்டுப்பாட்டை இழந்த கார், நிலைதடுமாறி அருகே இருந்த சர்வீஸ் ரோட்டில் சீறிப் பாய்ந்து,அங்கே நின்று பேசிக்கொண்டிருந்த மூவர் மீதும் மோதியது. அதன்பின்னும் வேகம் குறையாத கார், சாலையோர பள்ளத்தில் பாய்ந்து நின்றது.விபத்தில் பலத்த காயமடைந்த தயாளன், சந்திரா, செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். காயமடைந்த மணிகண்டன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிய ஜெயபால் 39, என்பவரை கைது செய்தனர்.காரில் வந்த அவரது, 40 வயது சகோதரி, அவரது 13 வயது மகள் அதிர்ஷ்ட வசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

 

Tags :

Share via

More stories

Logo