"பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பெரிய தண்டனை வழங்க வேண்டும்”அமைச்சர் அன்பில் மகேஸ்

by Staff / 22-08-2024 02:52:43pm

மாணவிகள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பெரிய தண்டனை வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர், "மாணவிகள் மீதான பாலியல் அத்துமீறல்களை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தாலும், இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு பெரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். குற்றங்களை பள்ளி நிர்வாகத்தினர் மூடி மறைக்கக் கூடாது. உடனடி நடவடிக்கைகள் மட்டுமே பெற்றோருக்கு பள்ளிகள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via
Logo