மழை பெய்ய வேண்டி நள்ளிரவில் ஆண்கள் மட்டும் கலந்துகொண்டு 101 ஆடுகளை பலியிட்டு பூஜை.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் மானாவாரி விவசாய பணிகளுக்கு மழை பெய்ய வேண்டி எல்லை பிடாரி அம்மனுக்கு மண் பீடம் அமைத்து காட்டுப் பகுதியில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத் வழிபாடு நடைபெற்றது
ஒவ்வொரு ஆண்டும் மூன்றாவது வார புரட்டாசி சனிக்கிழமை நடைபெறும் ஆண்கள் இத்திருவிழா
மானாவாரி பயிர்களுக்கு மழை பெய்ய வேண்டியும் இயற்கை சீற்றங்களில் இருந்து விவசாயிகளை பாதுகாத்திட வேண்டிய ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத வழிபாடு நள்ளிரவில் ஆண்கள் மட்டும் பூஜையில் பங்கேற்று அதிகாலையில் 101 ஆடுகளை பலியிட்டு எல்லை பிடாரி அம்மனுக்கு படையல் இட்டு ஆண்களுக்கு மட்டுமே பிரசாதமாக கறி விருந்து நடைபெற்றது
ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத வழிபாட்டில் கமுதி சுற்று வட்டார 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே பங்கேற்று எல்லை பிடாரி அம்மனை வழிபாடு செய்து அசைவ விருந்தில் பங்கேற்று பிரசாதம் பெற்று சென்றனர்.
Tags : மழை பெய்ய வேண்டி நள்ளிரவில் ஆண்கள் மட்டும் கலந்துகொண்டு 101 ஆடுகளை பலியிட்டு பூஜை.