கரையை கடக்க தொடங்கியது குலாப் புயல்

by Editor / 26-09-2021 09:24:18pm
கரையை கடக்க தொடங்கியது குலாப் புயல்

விசாகப்பட்டினம் அருகே கரையை கடக்க தொடங்கியது குலாப் புயல் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குலாப் புயல் கரையை கடக்க மேலும் 3 மணி நேரம் ஆகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
இது குறித்து ஆந்திர பிரதேச பேரிடர் மேலாண்மை ஆணையர் கண்ணபாபு கூறுகையில், குலாப் புயல் கலிங்கப்டடினம் மற்றும் ஒடிஷா இடையே கரையை தட்டியதாகவும், கலிங்கப்பட்டினத்துக்கு வடக்கே சுமார் 25 கிமீ தொலைவில் புயல் கரையை தாக்கியதாகவும் தெரிவித்தார். புயல் கரையை முழுமையாக கடக்க சுமார் மூன்று மணி நேரம் ஆகும் என்றும் அவர் கூறினார்.

கலிங்கப்பட்டினம் கடற்கரையில் மணிக்கு 75-95 கிமீ வேகத்தில் காற்று வீசும். எனவே மக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

கடற்கரையில் சூறாவளி மணிக்கு 75 முதல் 95 கிமீ வேகத்தை எட்டும் என்றும் கடல் சீற்றமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிஷா மாவட்டங்களுக்கு புயல் அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பகுதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பொழியலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.குலாப் புயல் தாக்கம், ஒடிஷாவில் உள்ள 10 மாவட்டங்களில் ஏற்படும் என்று அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் கூறியிருக்கிறார். புயல் பாதிப்பு காரணமாக, ஒடிஷாவின் சில கடலோரபகுதிகளில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது

 

Tags :

Share via