தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்து பிரதமர் நரேந்திரமோடி பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை
தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்து பிரதமர் நரேந்திரமோடி கிண்டி நட்சத்திர ஓட்டலில் காலை சுமார் 11.00 மணி அளவில் மாநில பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நிகழ்த்தினார். இந்த ஆலோசனை மத்திய அமைச்சர் முருகன், தமிழக பாஜக தலைவர்நயினாா் நாகேந்திரன் ,அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், மாலதி சீனிவாசன் மற்றும் பி .எஸ். கோயல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பூத் அளவிலான திட்டமிடல் மற்றும் வாக்காளர்களை சென்றடைதல் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைப்பு மற்றும் தேர்தல் பிரச்சார ஊர்த்திகள் பற்றி பிரதமர் அறிவுரைகள் வழங்கினார். கடந்த கால தேர்தல்களை விட கூடுதல் வாக்குகளை பெறுவதற்கும் திமுகவிற்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைக்கவும் பிரதமர் கேட்டுக்கொண்டார். சென்னையில் இந்த ஆலோசனையை முடித்துக் கொண்டு மதியம் ஒரு மணி அளவில் பிரதமர் மோடி சென்னையில் இருந்து கேரளாவுக்கு புறப்பட்டு சென்றார்.
Tags :



















