சிறுமியை கடத்தி பலாத்காரம் - போக்சோவில் இருவர் கைது

by Staff / 25-11-2023 04:58:39pm
சிறுமியை கடத்தி பலாத்காரம் - போக்சோவில் இருவர் கைது

நாமக்கல் கொசவம்பட்டியை சேர்ந்த சிறுமி திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே வளாகத்தில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த டெய்லரான ரவிக்குமார் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சிறுமியை ரவிக்குமார் கடத்திச் சென்றதாக சிறுமியின் பெற்றோர்கள் நாமக்கல் காவல்துறையிடம் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் ரவிக்குமார் மற்றும் சுரேஷ்குமார் ஆகிய இருவரும் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டு இருவரையும் காவல்துறையினர் போக்சோவில் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories