வேட்பாளர்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை - இபிஎஸ்

by Staff / 11-01-2024 03:05:15pm
வேட்பாளர்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை - இபிஎஸ்

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும்; கூட்டணி அமைந்ததும் முறைப்படி அறிவிக்கப்படும். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களுக்கு சீட் வழங்கப்படும்; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.

 

Tags :

Share via