நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நாளை (ஜூலை. 17) 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இன்று (ஜூலை. 16) கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 18இல் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
Tags :



















