தனியார் பேருந்தை சேதப்படுத்திய 3 பேருக்கு 3 வருட சிறை தண்டனை, 5ஆயிரம் அபதாரம் 

by Editor / 03-08-2023 09:48:14pm
தனியார் பேருந்தை சேதப்படுத்திய 3 பேருக்கு 3 வருட சிறை தண்டனை, 5ஆயிரம் அபதாரம் 

தென்காசி மாவட்டம் தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் கடந்த 20.1.23 அன்று அன்வர், டேவிட் ராஜா, ஐயப்பன் ஆகியோர் ரகளையில் ஈடுபட்டு தனியார் பேருந்து நிலையம் சேதப்படுத்தினர்.

இது தொடர்பாக வந்த புகாரை அடுத்து தென்காசி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த வழக்கானது தென்காசி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

விவாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பொன் பாண்டி குற்றவாளிகள் மூன்று பேருக்கும் மூன்று வருட சிறை தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனைத் தொடர்ந்து அவர்கள் மூவரும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

Tags :

Share via

More stories