சுருக்குமடிவலைகளை பறிமுதல் செய்ய மீன்வளத்துறை இயக்குனர் பூம்புகார் துறைமுகத்திற்கு வருகை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடிவலைகளை பறிமுதல் செய்ய மீன்வளத்துறை இயக்குனர் இளம் வழுதி தலைமையில் அதிகாரிகள் பூம்புகார் துறைமுகத்திற்கு வருகை.
சுருக்குமடி வலைகளை பறிமுதல் செய்யக்கூடாது என மீனவர்கள் வாக்குவாதம்.அதனைத் தொடர்ந்து மீனவர்கள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சுருக்குமடி வலைகளை பறிமுதல் செய்ய மீனவர்கள் இரண்டு நாள் கால அவகாசம் கோரிய நிலையில் அதனை ஏற்க மறுத்த மீன்வளத்துறை துறை இயக்குனர் மற்றும் அதிகாரிகள் உடனடியாக சுருக்குமடி வலைகளை பறிமுதல் செய்யப்போவதாக தெரிவித்தால் பூம்புகார் துறைமுகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags :



















