பள்ளியில் பிணமாக கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது

by Staff / 02-11-2023 05:15:34pm
பள்ளியில் பிணமாக கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது

திருப்பூர்-தாராபுரம் சாலை கே. செட்டிபாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த நிலை யில் அந்த பள்ளியில் புதியதாக கட்டிட கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது அந்த கட்டிட பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிட பணி நடைபெற்றபோது பணியாளர்கள் தங்குவதற்காக அங்கு தகரத்தினால் ஆன செட் அமைக்கப்பட்டுள்ளது. அந்த தகர செட் பகுதியில் முகம் சிதைந்த நிலையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரித்து வந்தனர்.விசாரணையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த பெண் பழவஞ்சிபாளையத்தை சேர்ந்த கவிதா (வயது 46) என்பது தெரியவந்தது. அந்தப் பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் போலீசார் தொடந்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo