மாணவர் அமைப்பினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு

by Staff / 09-03-2024 01:35:40pm
மாணவர் அமைப்பினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு

புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரி முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சிறுமியின் மரணத்திற்கு நீதிகேட்டு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள அனைத்து மாணவர் அமைப்புகள் மற்றும் இளைஞர் அமைப்பு சார்பில் 100க்கும் மேற்பட்டோர் அண்ணாசிலையில் இருந்து ஊர்வலமாக சென்று ஆளுநர் மாளிகையை முயன்றனர் அப்போது அவர்களை அரசு பொது மருத்துவமனை அருகே போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்தனர். அப்போது தடுப்புகளை தாண்டி போராட்டகாரர்கள் செல்ல முயன்ற போது போராட்டகாரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via
Logo