ஆயுளை நீட்டிக்கும் இயற்கை மருத்துவம்: அமைச்சர்.. சுப்பிரமணியன்

by Staff / 19-11-2023 04:35:59pm
ஆயுளை நீட்டிக்கும் இயற்கை மருத்துவம்: அமைச்சர்.. சுப்பிரமணியன்

யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சையால் ஆயுள் நீடிப்பதுடன், கோபம் மற்றும் பயத்தையும் போக்க முடியும், '' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.இயற்கை மருத்துவ தினம், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில் நேற்று கொண்டாடப்பட்டது.

அப்போது, சென்னையில் இருந்து காணொலி வாயிலாக மாணவர்களிடம் அமைச்சர் சுப்பிரமணியன் பேசினார். செங்கல்பட்டில் உள்ள சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் கொண்டாடப்படும், இயற்கை மருத்துவ தினத்தில், ஆரோக்கிய அங்காடிகள், மூலிகை செடி கண்காட்சி, மருத்துவ பரிசோதனை, இயற்கை உணவு கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

தமிழகத்தில் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவம், இந்தியாவிற்கே முன்மாதிரியாக செயல்பட்டு வருகிறது. யோகா, இயற்கை மருத்துவத்தில், பக்கவிளைவு இல்லாத உபவாச சிகிச்சை, யோகா சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, நீராவி குளியல், வாழை இலை குளியல், மண் குளியல், காந்த சிகிச்சை, நிற சிகிச்சை, நீர் சிகிச்சைகள் உள்ளன.

மேலும், இயற்கை உணவு சிகிச்சை மற்றும் இயற்கை மூலிகை சிகிச்சை, அக்குபஞ்சர், அக்குப்பிரசர், நறுமண சிகிச்சை மற்றும் மனநல ஆலோசனை போன்றவையும் அளிக்கப்படுகின்றன. இச்சிகிச்சைகளால், ஆயுள் நீடிப்பதுடன், கோபத்தையும், பயத்தையும் நீக்க மனதையும், உடலையும் சாந்தப்படுத்துகிறது.

 

Tags :

Share via