கிரைண்டரில் மின்சாரம் தாக்கி பெண் பலி

by Editor / 14-04-2025 02:23:42pm
கிரைண்டரில் மின்சாரம் தாக்கி பெண் பலி

கேரளா பாலக்காட்டில் பெண் ஒருவர் கிரைண்டரில் மாவு அரைக்கும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுபா பாய் (50) என்ற பெண் தனது வீட்டு கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இதையடுத்து, சுபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். கிரைண்டர் மின் வயரில் ஏற்பட்ட பழுதுதான், மின் கசிவுக்கு காரணமென போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

Tags :

Share via

More stories