இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது வலிமை
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வெகு நாட்களாக படப்பிடிப்பில் இருக்கும் திரைப்படம் வலிமை. இருப்பினும் கடந்த சில மாதங்களாக 'வலிமை' படத்தின் எந்த ஒரு அடுத்தகட்ட அறிவிப்பும் வராததால் ரசிகர்களிடம் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
இதன் காரணமாக பல்வேறு பொது இடங்களிலும் வலிமை அப்டேட் குறித்து ரசிகர்கள் கேட்டு வந்தனர். இறுதியாக கடந்த வாரம் படத்தின் இயக்குனர் எச்.வினோத் ஜுலை 15 அன்று ' வலிமை' படத்தின் முதல் பார்வை வெளியாகும் என அறிவித்திருந்தார்.
தற்போது அவருடைய ட்விட்டர் பக்கத்தில் 'வலிமை' படத்தின் முதல் பார்வை மற்றும் மோஷன் போஸ்டர் ( motion poster ) இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவித்திருக்கிறார்.
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கும் காத்திருப்பிற்கும் பின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு வலிமை அப்டேட் வெளியாகிறது.
Tags :



















