பீகார் மற்றும் மேற்குவங்கத்தில் நிலநடுக்கம்

இந்தியாவில் சமீப காலமாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது பீகார் மற்றும் மேற்குவங்கத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 கிமீ ஆழத்தில் நில அதிர்வுகள் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திடீரென பூமி குலுங்கியதால் மக்கள் அச்சத்தில் நடுங்கினர். வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. எவ்வாறாயினும், சொத்து மற்றும் உயிர் சேதம் குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
Tags :