பாஜக, அதிமுக இடையே ஒட்டும், உறவும் இல்லை - செல்லூர் ராஜு

by Staff / 19-06-2024 11:22:19am
பாஜக, அதிமுக இடையே ஒட்டும், உறவும் இல்லை - செல்லூர் ராஜு

“பாஜக, அதிமுக இடையே ஒட்டும், உறவும் இல்லை என ஏற்கனவே தெரிவித்துவிட்டோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
திமுக அரசு சட்டத்துக்கு புறம்பாக செயல்பட வாய்ப்பு உள்ளதால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளோம். வாக்கு வங்கியை தெரிந்து கொள்வதற்காக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியை கட்டி காக்க ராகுல் காந்தி விடா முயற்சி எடுத்து வருகிறார். ராகுல் காந்திக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என கூறினார்.
 

 

Tags :

Share via