கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு பணி: முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.

by Editor / 11-02-2022 11:59:49am
கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு பணி: முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வுப் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்

கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் இதுவரை 7 கட்டங்களாக அகழாய்வுப் பணிகள் நடந்தன. 7818 பொருட்கள் கிடைத்தன.கே.மு.6ஆம் நூற்றாண்டு வரலாற்று ஆதாரங்கள் கிடைத்துள்ளன.2600 ஆண்டுகளுக்கு முன்னர் பழமையவாய்ந்தவை.கல்வியறிவு நிறைந்தவர்களாக அன்றயதமிழர்கள் இருந்துள்ளனர்.நாகரீக நிறைந்த மக்கள் வாழ்ந்ததற்கான ஆதரங்கள் கிடைத்துள்ளன.

இதில் வீராணண் என்பவரது 1.5 ஏக்கர் நிலத்தில் பாசிமணிகள், தாயக்கட்டை, அணிகலன்கள், முதுமக்கள் தாழிகள் உட்பட பல ஆயிரம் தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இவற்றை மக்கள் காணும் வகையில் கொந்தகையில் கீழடி அகழ் வைப்பகம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இதற்கிடையே, கீழடியில் 8-ம்கட்ட அகழாய்வுப் பணி தொடங்கப்படும் என கடந்த மாதம் தமிழக அரசு அறிவித்தது. இப்பணி கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் பிப்ரவரி முதல் செப்டம்பர் வரை நடக்கும் என தெரிவிக்கப்பட்டது.

அகழாய்வு நடக்க உள்ள இடத்துக்கு பாதை வழங்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை அதிகாரிகள் சமரசப்படுத்தினர். இந்நிலையில் கீழடி 8-ம் கட்ட அகழாய்வுப் பணியை முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.மேலும் தொல்லியல்துறை அதிகாரிகள் முதல்வருக்கு கீழடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிடைத்த அரியவகை பொருட்களின் சேகரிப்பை காணொளி காட்சியில் விளக்கினார்.
 

 

Tags : Below is the 8th phase of excavation work: CM started today.

Share via