குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10 நாட்கள் நடைபெறும் இந்த தசரா திருவிழாவிற்காக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் சொந்த ஊர்களில் குடில் அமைத்து பல்வேறு வேடங்கள் அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை பெற்று கடைசி நாளில் கோவிலில் செலுத்துவார்கள்.
இந்த நிலையில் சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதியான தாமரை மொழி, தட்டார்மடம், சாலை புதூர்,பூச்சிக்காடு,உசரத்து குடியிருப்பு,நடுவக்குறிச்சி இது போன்ற பல்வேறு கிராமங்களில் மாலை அணிந்த பக்தர்கள் காளி வேடங்கள், தீச்சட்டி ஏந்தியபடி காளி வேடம் அணிந்தவர்கள், சுடலை, அம்மன், குறவன், குறத்தி, அனுமன் உள்பட பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை பெற்றனர்.இதற்காக மேள தாளங்கள் முழங்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆடிப்பாடி வீதி வீதியாக சென்று காணிக்கை பெற்றனர்.
Tags :