கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வடிவேலு

by Editor / 13-09-2021 09:37:22am
கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வடிவேலு

நடிகர் வடிவேலு நேற்று (செப்.12) தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு முழு வீச்சில் அவர் திரைப்படங்களில் நடிக்க வருகிறார். இந்த உற்சாகத்தில் இருந்த அவரது ரசிகர்கள், பிறந்தநாளில் உலகெங்கிலும் இருந்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

நாய் சேகர், வெடிகுண்டு முருகேசன், தீப்பொறி ஆறுமுகம், வண்டு முருகன், கைபுள்ள உள்ளிட்ட பெயர்களுடன் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். கடந்த சில ஆண்டுகளாக தனது பிறந்தநாளில் வெளியே வராத வடிவேலு குடும்பத்தினருடன் கொண்டாடினார்.ஆனால் இந்த ஆண்டு, நடிகர் வடிவேலு கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Tags :

Share via