நீட் நடுநிலையான தேர்வு முறை அல்ல - மசோதாவில் குற்றச்சாட்டு

by Editor / 13-09-2021 09:35:31am
நீட் நடுநிலையான தேர்வு முறை அல்ல - மசோதாவில் குற்றச்சாட்டு

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு பெற வகை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்படவுள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு நடுநிலையான தேர்வு முறை இல்லை என்பது ராஜன் குழு அறிக்கையில் இருந்து தெளிவாகிறது. தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு விலக்கு மசோதா தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் தேர்வு தொடர்பாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. கட்டாயமாக எதிர்கொள்ளும் கூடுதல் தேர்வால் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சுமை ஏற்பட்டுள்ளது.

கடந்த நாட்களில் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் நம்பிக்கை கனவை தகர்த்துள்ளது நீட் . நீட் தேர்வு சமத்துவமின்மையை வளர்ப்பதாகவும் விலக்கு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீட் பயிற்சி பெறக்கூடிய சமூகத்தின் பொருளாதார அதிக சலுகை பெற்ற வகுப்பினரை ஆதரிக்கிறது. சமூக நீதியை உறுதிசெய்ய சமத்துவம், சம வாய்ப்பு நிலைநிறுத்த மசோதா கொண்டு வரப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via