மாமனார் சொத்தில் மருமகனுக்கு உரிமை கிடையாது -கேரளா உயர்நீதிமன்றம்

by Editor / 06-10-2021 10:32:46am
மாமனார் சொத்தில் மருமகனுக்கு உரிமை கிடையாது -கேரளா உயர்நீதிமன்றம்

கேரளாவில் கன்னூரிலுள்ள தலிபரம்பாவில் வசித்து வருபவர் ஹென்றி தாமஸ். இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். டேவிஸ் ரபேலுக்கு மகளை திருமணம் செய்துகொடுத்தார். திருமணத்தின் போது செயின்ட் பால் தேவாலாயம் சார்பில் பரிசுப் பத்திரமாக ஹென்றியின் சொ

மாமனார் ஹென்றி மருமகனை தத்தெடுத்தாகவும் சொல்லப்பட்டு வருகிறது. தற்போது மாமானாரின் சொத்தில் டேவிஸ் சட்டப்பூர்வ உரிமை கோரியிருக்கிறார். ஆனால் ஹென்றி இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். டேவிஸ் தனது சொத்துக்களில் அத்துமீறி நுழைய தடைவிதிக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

மேலும் சொத்து மற்றும் வீட்டின் உடைமைகளை அனுபவிக்கவும், தலையிடவும் நிரந்தர தடை உத்தரவு விதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கின் விசாரணையில் டேவிஸ் தனது சொந்த பணத்தில் ஒரு வீடு மட்டுமே கட்டியுள்ளார். இதுவரை அவர் தனது வீட்டில் தான் வசித்து வருகிறார். ஆனால் டேவிஸ் தரப்பில் குடும்பத்திற்காக தேவாலய பரிசுப் பத்திரமாக சொத்துக்கள் இருப்பதால் சொத்தின் உரிமை மாமனாருக்கு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இருதரப்பு வாதங்களுக்கு பிறகு மருமகன் டேவிஸ் வீட்டில் வசிக்க தார்மீக உரிமை இருப்பதாகவும், அதே சமயம் ஹென்றியின் சொத்தில் உரிமை கோர முடியாது எனவும் தீர்ப்பளித்துள்ளது.


இதனை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் டேவிஸ் மேல் முறையீடு செய்தார். உயர் நீதிமன்றத்தில் “ஹென்றியின் மகளுடன் திருமணத்திற்குப் பிறகு, அவரும் குடும்பத்தின் ஒரு உறுப்பினர். இதற்கு பிறகும் மாமனாருக்கு எதிராக வாதிடுவது வெட்கக் கேடானது” எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

 

Tags :

Share via