ஹரியானா மாநில கர்னால் விவசாயிகள் போராட்டம் வெற்றி

by Editor / 12-09-2021 09:08:30pm
ஹரியானா மாநில கர்னால் விவசாயிகள் போராட்டம் வெற்றி

விவசாயிகள் போராட்டத்தின் போது விவசாயிகளின் மண்டையில் அழிக்கும்படி போலீசாருக்கு உத்தரவு வழங்கிய ஐஏஎஸ் அதிகாரி ஆயுஷ் சின்கா மீது நீதி விசாரணை நடத்த ஹரியானா மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனைத் தொடர்ந்து விவசாயிகள் கடந்த 4 நாட்களாக நடத்திவந்த முற்றுகைப் போராட்டத்தை சனிக்கிழமையன்று விலக்கிக் கொண்டனர்.

ஹரியானா மாநில அரசுக்கும் விவசாயிகள் சங்கங்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை மற்றும் பேச்சுவார்த்தை உடன்பாடு விவரங்களை ஹரியானா மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் தேவேந்தர் சிங்கும்  அரியானா மாநில விவசாயிகள் சங்க தலைவர் குர்நாம் சிங் சாருனியும் கூட்டாக செய்தியாளர்களிடம் கர்னால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே அறிவித்தனர்.

மாவட்ட ஆட்சியர் ஆய்வு சினிமாவில் நடவடிக்கை விவசாயிகள் மீது போலீஸ் தடியடி விவசாயி மரணம் ஆகிய பிரச்சனைகள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் நீதி விசாரணை மேற்கொள்ளப்படும் நீதி விசாரணை ஒரு மாத காலத்துக்குள் முடிக்கப்படும் இந்த 1 மாத காலம் எடுக்கும் அதிகாரி பணிக்கு வரமாட்டார் அவர் விடுப்பில் இருப்பார் என்று தேவேந்தர் சிங் கூறினார்.

தொடர்ந்து விவசாயிகள் சங்கத் தலைவர்  குர்நாம் சிங் கூறும்பொழுது.

இறந்த விவசாயி குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு ஒரு வார காலத்தில் அரசு வேலை வழங்கப்படும். விவசாயிகள் குடும்பத்துக்கான இதுகுறித்து நீதி விசாரணை கமிஷன் முடிவுக்குப் பிறகு அறிவிக்கப்படும் என்று விவசாயிகள் சங்கத் தலைவர் கூறினார்.

பேச்சுவார்த்தை விபரங்கள் சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர்களிடம் தெரிவிக்கப்பட்டு அவர்களின் ஒப்புதலுக்குப் பிறகு வெளியிடப்படுவதாக குர்நாம் சிங் குறிப்பிட்டார்.

பேச்சுவார்த்தை முடிந்து உடன்பாடு ஏற்பட்டக் காரணத்தினால் முற்றுகைப்  போராட்டத்தை சனிக்கிழமையோடு விலகிக்கொள்வதாகவும் கூறினார்.

செய்தியாளர்களிடம் கூறிய விவரங்களை ஹரியானா மாநில விவசாயிகள் சங்க தலைவர் குர்நாம் சிங் பின்னர் விவசாயிகள் மத்தியில் உரையாற்றும்போது விளக்கினார்.

கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி விவசாயிகள் மீது தடியடி நடந்தது.

செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி புதன்கிழமை அன்று விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தை துவக்கினார்கள்.

 

Tags :

Share via