மாணவி மீது ஆசிட் வீச்சு

கர்நாடகாவில் வெள்ளிக்கிழமை இரவு கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ராம் நகர் மாவட்டம் கனகபுரா பகுதியில் சுமந்த் (22) என்ற வாலிபர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவியை காதலிப்பதாக கூறி துன்புறுத்தி வருகிறார். காதலை நிராகரித்ததால் ஆத்திரமடைந்த வாலிபர், மாணவி மீது ஆசிட் வீசிவிட்டு தப்பியோடினார். இதில் பலத்த காயம் அடைந்த மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் சில மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்தனர்.
Tags :