தவெக மாநாடு குறித்து கட்சியின் தலைவர் விஜய் அறிக்கை.

தமிழக வெற்றிக்கழக மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு, ஏற்பாடு பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த மாநாட்டிற்காக தவெக தலைவர் விஜய் தனது தொண்டர்களுக்காக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ‘‘அரசியல் களத்தில் வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று’’ என்றும், ‘‘செயல்மொழி தான் முக்கியம்’’ என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘‘மாநாட்டில் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பலரும் பங்கேற்க ஆர்வமாக இருப்பர் என்பது தனக்கு தெரியும். அவர்களை காண நானும் ஆவலாக தான் இருக்கிறேன். ஆனால் அனைத்தையும் விட எனக்கு அவர்கள் உடல்நலமே மிக மிக முக்கியம்.
மாநாட்டிற்காக அவர்கள் மேற்கொள்ளும் நீண்ட தூர பயணம், அவர்களுக்கு உடல்ரீதியாக சிரமத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே அவர்கள் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வரவேண்டாம் என அவர்கள் குடும்ப உறவாகவும் இருக்கும் உரிமையில் கேட்டுக்கொள்கிறேன்’’
மேலும் அவர்கள் வீடுகளிலிருந்தே, ஊடகம் வாயிலாகவும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவித்த அவர், ‘‘மாநாட்டிற்கு வரும் அனைவரும் பாதுகாப்பாக பயணிப்பது மிக மிக முக்கியம்’’ எனக் கூறியுள்ளார்.
Tags : தவெக மாநாடு குறித்து கட்சியின் தலைவர் விஜய் அறிக்கை.