ஓபிஎஸ் திமுகவில் இணைந்துவிட்டார் - இபிஎஸ் விமர்சனம்

by Staff / 19-11-2023 12:24:13pm
ஓபிஎஸ் திமுகவில் இணைந்துவிட்டார் - இபிஎஸ் விமர்சனம்

ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துவிட்டார் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் முதலமைச்சரின் தனித்தீர்மானம் குறித்து பேசிய அவர், ஓபிஎஸ் சூடு, சொரணை இல்லாமல் பேசி வருகின்றார். பாஜகவில் இருந்து வெளியே வந்து விட்டோம். சிறுபான்மை வாக்கு அதிமுகவிற்கு வந்து விட்டது. தேர்தலுக்கு கால அவகாசம் இருக்கின்றது. தேர்தல் நேரத்தில் நல்ல கூட்டணி அமையும். திமுக ஆட்சி அவலங்களை எடுத்து சொல்வோம். இதை மக்கள் நன்கு புரிந்து இருக்கின்றனர் எனக்கூறினார். நேற்று அதிமுக வெளிநடப்பு செய்தது குறித்து ஓபிஎஸ் கருத்து தெரிவித்திருந்தார்.

 

Tags :

Share via