17 ஆம் தேதி ஜனாதிபதி,பிரதமரை சந்திக்கிறார் முதல்வர்.

நாளை மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். நாளை மறுநாள் காலையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவையும், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துகளை தெரிவிக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேசுகிறார். அப்போது 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்ததற்கும், இந்த போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்ததற்கும் பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவிக்கிறார். அன்று இரவே முதலமைச்சர் சென்னை திரும்புகிறார்.

Tags :